யாழில் தேவையுடைய மக்களுக்கு படையினரால் உலர் உணவுகள் விநியோகம்

ஏப்ரல் 24, 2020

யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 511வது பிரிகேட் படைவீரர்கள் சாவக்காடு மற்றும் சந்திலுப்பை பகுதியில் தேவையுடைய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வினியோகம் செய்தனர். குறித்த இந்த நடவடிக்கை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரியவின் வழிகாட்டுதலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டது.

 
இந்த உலர் உணவுப் பொருட்கள் யாழ் குட் ஷெப்பர்ட் கன்னியர் மடத்தில் உள்ள அருட் சகோதரிகளுக்கு வழங்ககப்பட்டது
 
இதேவேளை, 511வது பிரிகேட் படைவீரர்கள், கட்டுவான்,காங்கேசன்துறை மற்றும் வசாவிளான் பகுதிகளிலும் உலர் உணவு பொதிகளை வினியோகிக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.