கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 415 பேரில் ஐவர் இரத்தினபுரி, குருநாகல், கண்டி மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்கள்

ஏப்ரல் 24, 2020

மொத்தம் 415 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 47 பேர் இன்று பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார். அதில் 30 பேர் வெளிசர கடற்படைத் தளத்தை சேர்ந்த கடற்படை வீரர்களுக்கும், கொழும்பு -12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 11 பேருக்கும் மற்றும் மருதானையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 
இதேவேளை, இரத்தினபுரி, குருநாகல், கண்டி மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 5 கடற்படை வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.