பிலியந்தலை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் சிவில் பாதுகாப்பு படையினரால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை

ஏப்ரல் 25, 2020

பிலியந்தலை மற்றும் மொரட்டுவ பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினரால் அத்தியவசிய பொருட்கள் சலுகை விலையில் நேற்று (ஏப்ரல்,24) வினியோகம் செய்யப்பட்டது.

ஊவா பரணகம மற்றும் வெலிமடையில் அண்மையில் நிறுவப்பட்ட கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் என்பன இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. சிவில் பாதுகாப்பு படையினரின் இந்த முன்னெடுப்புகள் மூலம், தமது அறுவடையை விற்பனை செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களும் நன்மை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.