அமேரிக்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஜூன் 03, 2019

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திரு. ஆர். கிளார்க் கூப்பர் மற்றும் இலங்கைக்கான அமேரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலய்னா பீ . ரெப்லிட்ஸ் ஆகியோருடனான அமேரிக்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜூன், 03) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, அமேரிக்க தூதுக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.