இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் மீடியா வழியாக வெசாக் பண்டிகை கொண்டாட ஜனாதிபதியினால் புதிய வழிமுறை

ஏப்ரல் 25, 2020

இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் மீடியா வழியாக வெசாக் பண்டிகையை கொண்டாடும் வழிவகைகள் தொடர்பாக மூன்று பீடங்களினதும் தலைமை மகாநாயக்க தேரர்கள் உடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"நான், கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலவரங்களை மூன்று பீடங்களினதும் வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினருடன் பரிமாறிக் கொண்டதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். மேலும் அவர்களுடன் விகாரைகளின் நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினேன் என ஜனாதிபதி விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.