இளைஞர் ஒருவர் உட்பட மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

ஏப்ரல் 25, 2020

மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 433 அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், கண்டக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஏழு பேரும், வெளிசர கடற்படை தளத்தில் உள்ள நான்கு பேரும் அடங்குவதாக தெரிவித்த அவர், ஏனையோர் முன்னதாக பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.