இந்தியாவில் சிக்கியுள்ள 133 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

ஏப்ரல் 26, 2020

இந்தியாவில் சிக்கித்தவித்த 133 இலங்கையர்களை அழைத்துவந்த விசேட விமானம் ஒன்று இன்று மாலை இலங்கை வந்துள்ளது.

இந்தியா கோயம்புத்தூர் பகுதியில் சிக்கித்தவித்த அவர்களை இலங்கையின் UL 1194 விமானம் ஊடாக எழு பேர் கொண்ட அங்கத்தவர்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட அனைவரும் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.