கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்ததை தொடர்ந்து மொத்தம் 477 ஆக உயர்வு

ஏப்ரல் 26, 2020

கொவிட் – 19 கொரோனா தொடர்பான பீ சீ ஆர் பரிசோதனைகளின் போது கடற்படை வீரர்கள் 95 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 68 பேர் வெலிசறை காற்படை முகாமை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 27 பேரும் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றிருந்த கடற்படை வீரர்கள் எனவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலும் அறுவர் வைரஸ் தொற்றுக்குள்ளானதை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 477 ஆக உயர்வடைந்துள்ளது.