கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அனுமதிக்கும் வகையில் வெலிசறை கடற்படை வைத்தியசாலை தயார் நிலையில்

ஏப்ரல் 26, 2020

வெலிசறை கடற்படை தளத்தினுள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்படுமிடத்து அவர்களை வெலிசறை கடற்படை பொது வைத்தியசாலை அனுமதிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியசாலை வளாகம் முழுமையாக தொற்று நீக்கம் செயப்பாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்பிரகாரம் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களுக்கு குறித்த வைத்தியசாலையில் பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளபபடுவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் வெலிசறை கடற்படை தளப்பகுதி முழுவதுமாக கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையினை கடற்படையின் தொற்று நீக்கும் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.