இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் கையளிப்பு
ஏப்ரல் 27, 2020இலங்கை இராணுவ படை வீரர்கள் வன்னியிலுள்ள வரிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளை (24) வெள்ளிக்கிழமையன்று கையளித்துள்ளனர். வெளிநாட்டவர்களின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட குறித்த இவ்விரு வீடுகளையும் வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி, மேஜர் ஜெனரல் ரோகித தர்மசிறி கையளித்துள்ளார்.
தந்திரிமலை எத்டதகல பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான குடும்பத்தலைவர் கே டீ நந்தசேனவிற்கு முதலாவது வீடு வழங்க்கிவைக்கப்பட்டதுடன், தந்திரிமலை மேதவச்சியேலிய பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் டீ கே தினேஷ் குமார தெல்கஹபீலாவிற்கு இரண்டாவது வீடு வழங்க்கிவைக்கப்பட்டது.
தேவையுடைய வரியா குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வகையில் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட ஜகத் குணசேகர மற்றும் சாந்த குமாரகமகே ஆகிய நன்கொடையாளர்கள் 212 படைபிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் அணில் பீரிசின் அழைபினை ஏற்று இவ்வுதவியினை வழங்கியுள்ளனர்.
குறித்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் 21 ஆவது பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விகும் லியனகேயின் மேற்பார்வையின் கீழ் 212 படைப் பிரிவின் கீழுள்ள இலங்கை தேசிய காவட்படையின் 5 ஆவது படைவீரர்களின் மேற்கொண்டனர்.
குறித்த இரு வீடுகளையும் இவ்வரிய குடும்பங்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வில், 21 வது படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச் எல் வீ எம் லியனகே, 212 படைபிரிவு கட்டளை அதிகாரி, பிரதம சிவில் தொடர்புகள் அதிகாரி, 21 மற்றும் 212 படைப்பிரிவுகளுக்கான வன்னி பாதுகாப்பு தலைமையாகத்தின் சிவில் அதிகாரிகள், 5வது இலங்கை தேசிய காவற்படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.