21 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று நீக்கம்

ஏப்ரல் 28, 2020

21 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் இன்று மாலை எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படும்.  குறித்த காலாபகுதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை (மே முதலாம் திகதி) அமுலில் இருக்கும்.

குறித்த 21 மாவட்டங்களிலும் (27) திங்கட்கிழமையன்று ஊரடங்கு சட்டம் தளத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

இதேவேளை ஏனைய மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே மாதம் ஐந்தாம் திகதி அதிகாலை வரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.