பங்களதேஷ் நாட்டில் சிக்கியிருந்த 73 இலங்கை மாணவர்கள் வீடு திரும்பினர்

ஏப்ரல் 28, 2020

பங்களதேஷ் நாட்டில் சிக்கியிருந்த மீதமான 73 இலங்கை மாணவர்களும் இலங்கை எயார்லைன்ஸ் இன் விஷேட விமானமூலம் நேற்று (ஏபரல் 27) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இம்மாணவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.