இலங்கை இராணுவதினால் முல்லைத்தீவில் 30 குடும்பங்களுக்கு இலவசமாக உலருணவு பொதிகள் விநியோகம்

ஏப்ரல் 28, 2020

இலங்கை இராணுவம் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியுருப்பு மற்றும் மாளிகாதீவு பிரதேசங்களில் வசிக்கும் 30 தேவையுடை குடும்பங்களுக்கு இலவசமாக உலருணவு பொதிகளை விநியோகித்துள்ளது.

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் உழைத்து வாழும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமது சேவையை வழங்கும் வகையில் இராணுவம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதன் சமூக நலன்புரித்திட்டத்தின் ஒருபகுதியாக இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.