இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

ஏப்ரல் 28, 2020

இந்தியாவின் சிக்கித்தவித்த மற்றுமொரு மாணவ குழுவினர் சுமார் 113 பேர் கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து ஞாயிறு (26) மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக இராணுவ மற்றும் கடற்படையினால் முகாமைசெய்யப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் தற்போது நிலவிவரும் சுகாதார நிலைமைகள் காரணமாக சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் சிக்குண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.