அதிக எண்ணிக்கையிலான பீ சீ ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

ஏப்ரல் 28, 2020

நேற்று (27) அதிக எண்ணிக்கையிலான பீ சீ ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பனிப்பாளர் வைத்தியர், அணில்  ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் ஒருநாளைக்குள் சுமார்  1,400 பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பரிசோதனை வசதிகளை அதிகரிக்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் நேற்று பரிசோதனைகள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு பீ சீ ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் நாடுபூராகவும்  16 நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அணில் ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது இடம்பெற்றுவரும் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கொழும்பு, பேராதெனிய மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்கள் உறுதியளித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.