3,609 பேர் தற்பொழுதும் தனிமைப்படுத்தல் நிலையங்களில்

ஏப்ரல் 30, 2020

சுமார் 3,609 பேர் முப்படையினாரால் நிருவகிக்கப்படும் 32 தனிமைப்படுத்தும் நிலையங்களில் தற்பொழுதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், முப்படையினரால் நிருவகிக்கப்பட்டு வந்த நிலையங்களில் இருந்து நேற்றையதினம் (29) சுமார் 4,659  பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, வெலிசறை கடற்படை தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்வரைந்துள்ளது. இவர்களில் 147 பேர் கடற்படை முகாமுக்குள்ளே  எனவும் ஏனைய 79 பேர் முகாமுக்கு வெளியேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.