மே மாதம் 4 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமலில்

ஏப்ரல் 30, 2020

நாட்டின் 21 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் அமலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 5 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், மீண்டும் இன்று (30) இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் அமலில் இருக்கும்..