மார்ச் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 42,100 க்கும் அதிகமானோர் கைது

ஏப்ரல் 30, 2020

மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 42,101 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 10,860 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்துக்குள் ஊரடங்கு சட்டத்தை மீறிய 554 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 159 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.