அடையாளம் காணப்பட்ட நான்கு பகுதிகளில் மாத்திரமே கொவிட் -19
மே 01, 2020நாட்டின் 31 பகுதிகளில் கொவிட் -19 வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும் நான்கு பிரதேசங்களைத்தவிர ஏனைய அனைத்தும் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுதுவேல, பேருவளை, பண்டாரநாயக்கபுற மற்றும் வெலிசறை கடாட்படை தளம் ஆகியனவே தற்பொழுதும் கொரோனா தொற்று உள்ள பகுதியாக காணப்படுகிறது. எனினும் இப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் இதுவரையில் பதிவாகவில்லை எனவும் இந்நிலைமை சீரோ நிலைமைக்கு படிப்படியாக குறைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான 649 பேரில் நாலவர் போதைக்கு அடிமையானவர்கள் என ஊடகங்களிடம் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் ரோஹன சுட்டிக்காட்டினார்.
விசேடமாக மேலும் சுதுவெல பகுதியில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் போதைபொருள் பாவனையாலர்களே வைரஸ் பரப்புவதற்கு காரணமாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.