ஒலுவில் தனிமைப்படுத்தும் நிலையத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி

மே 01, 2020

இலங்கை கடற்படையினால் நிருவகிக்கப்பட்டு வரும் ஒலுவில் தனிமைப்படுத்தும் நிலையத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு நேற்று (30) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் ஜாஎல சுதுவேல பகுதியிலிருந்து ஒலுவில் தனிமைப்படுத்தும் நிலையத்தில் 14 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.