சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் அன்பளிப்பு

மே 02, 2020

அண்மையில் (ஏப்ரல் 29) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுமார் 575 க்கும் அதிகமான சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்களை  வடமத்திய மாகான சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளரிடம் அன்பளிப்பு செய்துள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதம பணிப்பாளர் கேர்ணல் நிலந்த ரத்னசிங்க defence.lk இற்கு தெரிவித்துள்ளார்.

குறித்த உபகரணங்களை  வடமத்திய மாகான சுகாதார சேவைகள் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கின்க சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதம பணிப்பாளர் ரியர் அட்மிரல் (ஒய்வு ) ஆனந்த பீரிஸின் ஆலோசனைக்கேற்ப வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த அன்பளிப்புக்களை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.