இக்டா வடிவமைப்பில் ஒன்லைன் மூலம் ஓய்வூதிய திணைக்களத்திற்கு

மே 02, 2020

•    ஓய்வூதிய திணைக்களத்திற்கு சுமார் 500 க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன  

வீட்டிலிருந்து ஒன்லைன் மூலமாக பணிகளை ஆரம்பிப்பதற்கு ஓய்வூதிய திணைக்களம் சுமார் 500 க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  ஓய்வூதிய திணைக்களம் தெரிவிக்கிறது.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய செயல் முறைமை மூலம் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் விண்ணப்பம் ஒன்று  மேலதிக செயற்பாடுகளுக்காக ஆன்லைன் ஊடாக பரீட்சிக்கப்பட்டடுள்ளது.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர் சிரிபாலா ஹெட்டியராச்சி, ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் மற்றும் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகள், இராணுவம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் ஆகியோர் meet.gov.lk ஊடாக ஒன்லைனில் சந்திப்புபினை மேற்கொண்டனர்.