தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 84 க்கும் அதிகமானோர் வீடு திரும்பினர்

மே 02, 2020

தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து சுமார் 84 க்கும் அதிகமானோர் தமது தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்து தமது சொந்த வீடுகளுக்கு இன்று (மே 02) திரும்பியுள்ளனர்.

இதன்பிரகாரம் பூனானையிலுள்ள பிராண்டிக்ஸ் தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 79 பேரும் வெலிக்கடை தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து ஐந்து பேரும் தமது தனிமைப்படுத்தும் காலங்களை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்கள் அனைவரும்  21 நாட்கள்  கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.