முப்படையினரால் நிருவகிக்கப்படும் 36 தனிமைப்படுத்தும் நிலையங்களில் 4,581 பேர் தனிமைப்படுத்தலில்

மே 02, 2020

முப்படையினரால் நிருவகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சுமார் 4,903 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இன்று  (மே 02) தெரிவித்துள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நிருவகிக்கப்பட்டுவரும் 36 தனிமைப்படுத்தும் நிலையங்களில் தற்பொழுதும் சுமார் 4,581 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.