ஜனவரி 25, 2019
இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரால் வன்னியில் பாதுகாப்பு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அரச மற்றும் தனியார் காணிகள் 54.38 ஏக்கர்களுக்கான உத்தியோக பூர்வ ஆவணங்கள் வட மாகாண ஆளுனர் திரு. சுரேன் ராகவன் அவர்களிடம் யாழில் அமைந்துள்ள அவரின் உத்தியோக பூர்வ அலுவகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் 40.74 ஏக்கர் அரச காணியும் 13.64 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான காணியும் உள்ளடங்குகின்றன.
காணி கையளிக்கும் நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.