மற்றுமொரு கடற்படை வீரர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணம்

மே 05, 2020
முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கடற்படை வீரர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார்.
 
குறித்த கடற்படை வீரருக்கு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் வைரஸ் தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் ஏப்ரல் 23ம் திகதி அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருக்கமான தொடர்பைப் பேணியதன் காரணமாக அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
 
மே 3ம் திகதி முதலாவது கடற்படை வீரர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.