வெளிசர விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 46 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மே 05, 2020
இலங்கை விமானப்படையினரால் நிர்வகிக்கப்படும் வெலிசரவில் உள்ள சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து மேலும் 46 பேர் இன்றைய தினம் (மே, 05) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
 
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கு அமைய புதிப்பிக்கபட்டுள்ள வைத்தியசாலையின் 11 மற்றும் 12ஆம் வார்டுகள் இலங்கை விமானப்படையினரால் தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் அனைத்து பணிகளும் வைத்தியசாலை கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் (வைத்தியர்) பி ஏ வி பத்மபெருமவின் மேற்பார்வையில் இடம்பெறுகின்ற அதேவேளை, பராமரிப்பு பணிகள் ஏக்கள வர்த்தக பயிற்சி பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
மையத்திற்கு பொறுப்பான இலங்கை விமானப்படை மருத்துவ அதிகாரி ப்ளையிங் ஒபிசர் (வைத்தியர்) திலுஷ்க ஜெயகொடி, நான்கு மருத்துவ ஊழியர்கள், மூன்று கிருமித் தொற்று நீக்கும் பணியாளர்கள் மற்றும் ஏகளவில் உள்ள இலங்கை விமானப்படையின் வர்த்தக பயிற்சி பாடசாலையைச் சேர்ந்த 18 பேர் ஆகியோர் இங்கு கடமை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த மையத்தில், ஏப்ரல் 20ம் திகதி முதல், கொழும்பில் உள்ள கிரண்ட்பாஸ், பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெலிசர வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.