நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கடற்படையினர் கரைக்கு கொண்டு வருகை

மே 05, 2020
நோய் பாதிப்பு காரணமாக உடற்பாகங்கள் செயற்படாமல் இருந்த மீனவர் ஒருவரை கடற்கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் உதவி அளித்துள்ளனர். 
 
கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினால் நேற்றைய தினம் (மே, 04) விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் குறித்த நபர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
 
பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்றிருந்த பயகள பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய எம்எஸ்கே பெரேரா என்பவரே இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையகத்தின் கீழுள்ள அதிவேக தாக்குதல் படகின் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு பண்டார தெரிவித்தார்.
 
கரைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளி மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.