இலங்கை கடற்படையின் பூச மற்றும் ஒலுவில் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 39 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

மே 05, 2020
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் பூச மற்றும் ஒலுவில் தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 39 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் தமது வீடுகளுக்க புறப்படுவதற்கு முன்னர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.