இன்று இரவு 8 மணி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மே 11 வரை நீடிக்கும்
மே 06, 2020கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய உயர் அபாய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (மே, 11) அதிகாலை 5.00 மணி வரை வரை தொடரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகள் என்பன எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீளி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த இந்தத் திட்டம் மே மாதம் 4ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும் இந்த வாரத்தில் அதிகமான விடுமுறை நாட்கள் காணப்பட்டதனால் இந்தத் திட்டம் எதிர்வரும் மே 11 முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.