தேவையுடைய வறிய குடும்பத்திற்கு வன்னி படையினரால் வீடு அன்பளிப்பு

மே 06, 2020

எப்பாவல பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கு வன்னியில் உள்ள படைவீரர்களினால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு பயனாளிக்கு கடந்த புதன்கிழமையன்று (மே, 06) கையளிக்கப்பட்டது. குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான ப்ரீத்தி கஜநாயக்க என்பவரினால் அளிக்கப்பட்டது.     

212 பிரிகேட்டின் கட்டளைத் தளபதி கேர்ணல் அனில் பீரிஸின் பிரத்தியேக கோரிக்கைக்கு அமைய குறித்த நிதி, நிர்மாணப் பணிகளுக்காக வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவி, வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறியினால் எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் பயனாளியான உப்புல் வனசூரியாராய்ச்சியிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. அத்தோடு வீட்டுக்கு அவசியமான தளபாடங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் என்பனவும் இவ்வைபவத்தின் போது பயனாளியின் குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது

இந்த வீட்டின் நிர்மாணப்பணிகள் ஏழாவது இலங்கை கவச படையணியினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.