துபாய் நாட்டில் நிர்க்கதியான நிலையிலிருந்த 197 இலங்கையர்கள் தாய் நாட்டுக்கு வருகை

மே 07, 2020
துபாய் நாட்டில் நெருக்கடியான நிலையில் காணப்பட்ட 197 இலங்கையர்கள் இலங்கை ஏயார்லைன்ஸின் UL 226 விமானத்தின் மூலம் இன்று காலை(மே,07) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் சவந்திகா பாலசூரிய தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இலங்கை ஏயார்லைன்ஸின் UL 194 விமானத்தின் மூலம் நேற்றைய தினம் இலங்கையைச் சேர்ந்த 194 பேர் லண்டனிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு அவர் தெரிவித்தார்.
 
நாடு திரும்பிய இலங்கையர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்ப படுவதற்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை விமானப்படை வீரர்களினால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டதாக திருமதி பாலசூரிய உறுதியளித்தார்.