இராணுவத்தினரின் தலைமையில் ஆணையிரவு தனிமைப்படுத்தல் மையத்தில் இரு சிறுவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

மே 07, 2020
ஆனையிறவு தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குள்ளாகியுள்ள இரு சிறுவர்களின் பிறந்தநாள் விழாவினை கடமையில் உள்ள யாழ் படையினர் ஏற்பாடு செய்தனர்.
 
இம்மாதம் 4ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தமது பிறந்தநாளை கொண்டாடும் பாத்திமா சபா மற்றும் பாத்திமா அர்ஷாட் ஆகியோரின் பிறந்தநாள் வைபவங்களே இவ்வாறு கொண்டாடப்பட்டது. இவர்கள் கொழும்பு வாழைத்தோட்ட பகுதியிலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக ஆணையிரவு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களாகும்.
 
55 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த படைவீரர்களின் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எளிமையான பிறந்தநாள் வைபவத்தில், சொற்ப அளவிலானோர் சமூக இடைவெளியை பேணி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.