யாழ் மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 701வது வீடு கையளிப்பு

மே 07, 2020
யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்காக யாழில் உள்ள படைவீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட 701வது வீடு கையளிக்கப்பட்டது.
 
யாழ்குடாநாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் தேவையுடைய மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இதற்கமைய காங்கேசன்துறை ஐந்தாவது இலங்கை இராணுவ சேவைகள் படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று உரும்பிராய் மேற்கு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் இராசம்மாவுக்கு அண்மையில் கையளிக்கப்பட்டது. எளிமையாக இடம்பெற்ற இந்த வைபவத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய கலந்துகொண்டு வீட்டின் சாவினை பயனாளிக்கு வழங்கி வைத்தார்.
 
மிக குறைந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டின் நிர்மாணப் பணிகளுக்கு 15வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் ஆளனி வசதிகளை அளித்தமை குறிப்படத்தக்கது.