கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் புதுமையான தீர்வுகள்

மே 07, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தணிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் செலவு குறைந்த புதுமையான கண்டுபிடிப்புகள் பல பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்றையதினம் (மே,06) காட்சிக்கு வைக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட கண்டுபிடிப்புகளில் நோயாளியின் நிலையை மதிப்பிடுவதற்காக ரிமோட் கொன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இயந்திர மனிதன் (Dr. Robort), நடைபாதை தொற்று நீக்கல் இயந்திரம், இரண்டு நடமாடும் தொற்று நீக்கல் தளங்கள் என்பன குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தளத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது அவர், வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னணியில் போராடும் வீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் புத்தாக்க முயற்சிகளுக்கு தனது பாராட்டினை தெரிவித்தார்.

மருத்துவ ஊழியர்களின் அபாய நிலையை குறைக்கும் வகையில், நோயாளியின் நிலையை மதிப்பிடுவதற்காக ரிமோட் கொன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ரொபோ இயந்திரத்தினை (Dr. Robort) கண்டுபிடித்த எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் மாணவனான தீஜன தேவுமினவுக்கு பாதுகாப்புச் செயலாளர் பரிசினை கையளித்தார்.

இந்த கண்டுபிடிப்புகள் அவற்றின் இறுதி அமைப்புக்கு அப்பால் சென்று, உற்பத்திக்கான அளவீடுகளாக அமைய முடியும் எனவும், இந்த கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவதற்கு எந்த நோக்கமும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி காண மத்திய நிலையத்திற்கு இல்லை எனினும் ஆர்வமுள்ள தரப்பினர் பெருமளவிலான உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரேணுகா ரோவல் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"இந்த கண்டுபிடிப்புகளின் வணிக உற்பத்தியை ஊக்கம் இழக்கச் செய்யும் எந்த நோக்கமும் கிடையாது" என தெரிவித்த மேஜர் ஜெனரல் ரோவெல், " நாட்டின் புதுமையான அபிலாஷைகளை சார்ந்து, இலங்கையின் எதிர்கால கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.