சட்டவிரோத சுழியோடல் உபகரணங்களைப் பயன்படுத்திய இருவர் கடற்படையினரால் கைது

மே 07, 2020

வலைப்பாடு பிரதேசத்தில் ஆழமற்ற நீர் நிலைகளில் சட்டவிரோத சுழியுடன் உபகரணங்களை பயன்படுத்துவதற்காக தற்காலிக கூடாரம் அமைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

19 மற்றும் 43 வயதுடைய வலைபாடு பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் சுழி ஓடலுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.