500,000 சிரேஷ்ட பிரஜைகள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற இராணுவம் உதவி

மே 07, 2020

நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில் தங்களது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள இலங்கை இராணுவம் உதவி வழங்கி வருகின்றது. சுமார் 500,000ற்கும் மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் தங்களது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக இராணுவத்தினரால் இச்சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக போக்குவரத்து செய்ய முடியாத நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வசதியாக கடந்த மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள சிரேஷ்ட பிரஜைகள் தமது ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை உடன் இணைந்து போக்குவரத்து வசதிகளை அளிக்குமாறு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படையினரிடம் இராணுவத்தளபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.