சிங்கப்பூர் மற்றும் டுபாய் நாடுகளிலிருந்து 382 இலங்கையர்கள் தாயகம் வருகை

மே 08, 2020

சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் வசிக்கும் 382 இலங்கையர்கள் நேற்றைய தினம் (மே, 07) நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 303 மற்றும் UL 226 ஆகிய விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

நாட்டுக்கு வருகை தந்த இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.