சீனாவினால் நன்கொடையளிக்கப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவ பொருட்கள் இன்று வருகை

மே 08, 2020

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன் கொடையாக அளிக்கப்பட்ட 30,000 கொரோனாவைரஸ் நியூக்ளிக் அமில சோதனை கருவிகள் (PCR பரிசோதனைக்காக பயன்படுத்தக் கூடியவை) மற்றும் 12,330 சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் முழு மேலாடைகள் என்பன இன்று மாலை 6.45மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

சீனா கிழக்கு ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான MU231 விமானம் மூலம் மூன்றாம் கட்ட மருத்துவ பொருட்கள் சீனாவின் ஷாங்காய் நகரத்திலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சீன அரசாங்கத்தினால் அளிக்கப்படும் மூன்றாம் கட்ட மருத்துவ உதவி பொருட்களில் 30,000 பரிசோதனைக் கருவிகள், 30,000 சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் முழு மேலாடைகள், 30,000 KN95 வகை முகக் கவசங்கள், 30,000 பாதுகாப்பு முகக் கண்ணாடிகள், 600,000 அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முகக் கவசங்கள் என்பன உள்ளடங்கி இருப்பதாக சீனத் தூதரகத்தின் ஊடக பேச்சாளர் லுவோ சோங் தெரிவித்தார்.