வெசக் போயா தினத்தில் யாழில் உள்ள 750 வறிய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிவாரணப் பொதிகள் விநியோகம்

மே 09, 2020

பனாகொடையை தலைமையாகக் கொண்ட இராணுவ பெளத்த சங்கத்தின் ஒத்துழைப்புடன்  தொண்டமானாறு, கெருடவில், வல்வெட்டித்துறை, ஆவாரங்கல், நவலியட்டல், கெட்பேலி, மிருசுவில், பவாசிக்குளம், கைதடி, சாவகாச்சேரி, கட்டை காடு, மல்லாகம், வெற்றிலைக்கேணி, கேவில், வல்லை, இனுவில், வட்டுக்கோட்டை, நாவந்துறை, சேவல்கட்டு, உடுவில் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு சுமார் 720 க்கும் மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழில் உள்ள படைவீரர்களினால் விநியோகிக்கப்பட்டது.    

யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவின் பணிப்புரைக்கமைய இக்கிராமங்களில் வசிக்கும் தேவையுடைய மக்களுக்கு இந்த உலர் உணவு பொதிகளும் சமைத்த உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.     

இந்த சங்கத்தினால் வெசாக் தின அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதியே, வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் மக்களுக்கான உணவுப் பொதிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.