புத்தளத்திலுள்ள ‘லுர்டு மாதா’ முதியோர் இல்லத்திற்கு இராணுவத்தினரால் உணர்வு உணவு மற்றும் சமைத்த உணவு வழங்கி வைப்பு

மே 09, 2020

முப்பத்தொன்று முதியோர்கள் வசிக்கும் புத்தளத்திலுள்ள ‘லுர்டு மாதா’ முதியோர் இல்லத்திற்கு இலங்கை இராணுவத்தினரால் உணர்வு உணவு மற்றும் சமைத்த உணவு வழங்கிவைக்கப்பட்டது.    

கடந்த வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்ட இந்த உலர் உணவுத் திட்டத்திற்கு 58 ஆவது பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களினால் நிதி உதவியளிக்கப்பட்டது.     

இதேவேளை கல்லடி மற்றும் நெலும் - வெவ கிராமத்தில் வசிக்கும் தேவையுடைய மக்களுக்கு 120 சமைத்த உணவுப் பொதிகள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.