மாலி நாட்டில் ஐ. நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல்
ஜனவரி 26, 2019இன்று காலை (25) ஆம் திகதி மாலி நாட்டில் ஐக்கிய நாட்டு சமாதான அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ அணியினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ரம மற்றும் 1ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த தலகொலவெவ பொல்பிடிகமவை பிறப்பிடமாக கொண்ட கோப்ரல் விஜயகுமார எஸ்.எஸ். ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இத் தாக்குதலில் 1ஆவது இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.ஜி.எஸ் குமாரசிங்க, கோப்ரல் கே.சி புஸ்பகுமார, மற்றும் 12ஆவது இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சி.எச்.எம்.எஸ் சந்திரசேகர ஆகிய படைவீரர்கள் காயமடைந்த நிலையில் அப்பிரதேசத்தில் உள்ள ஜியா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் நடவடிக்கை, மாலி பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மாலியில் உள்ள ஐக்கிய நாட்டு கண்காணிப்பு தலைமையகத்தின் மூலம் விசாரனைகள் மேற் கொண்டுவருவதாக தகவகள் வெளியாகியுள்ளன.