கடற்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 118 பேர் வீடு திரும்பினர்
மே 09, 2020இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை பூர்த்திசெய்து 118 பேர் நேற்றையதினம் வீடு திரும்பினர்.
கொழும்பு குணசிங்கபுர, டாம் வீதி, கிராண்ட்பாஸ் மற்றும் நகலகம் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 98 பேர் சம்பூர் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தும் ஜா- எல பிரதேசத்தைச் சேர்ந்த 20 பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த நபர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த போதை பொருளுக்கு அடிமையான ஏழு நபர்கள் தேசிய அபாய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கீழ் செய்யப்படும் நிட்டம்புவ உர பொல புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.