இரண்டு வார தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 378 பேர் வீடு திரும்பினர்

மே 09, 2020

இரண்டு வார கால தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த வாழைத்தோட்ட பகுதியைச் சேர்ந்த 378 பேர் இன்று வீடு திரும்பினர். இலங்கை இராணுவத்தினரால் முகாமைத்துவம் செய்யப்படும் யாழ் விடத்தல்பல்லை மற்றும் ஆனையிறவு தனிமைப்படுத்தல் மையங்களில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தனர் வீடு திரும்பினர்.      

கொழும்பு வாழைத் தோட்டப் பகுதியில் வசிக்கும் இவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் இரண்டு வாரகாலம் தனிமைப்படுத்துதல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.    

வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட முன்னர் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.