முல்லைத்தீவில் உள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு சமைத்த மற்றும் உலர் உணவுகள் படையினரால் வழங்கிவைப்பு

மே 10, 2020

வெசாக் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு சமைத்தமற்றும் உலர் உணவுப் பொதிகளை படையினர் வழங்கியுள்ளனர்.    

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள படைவீரர்களினால் நந்திக் கடல் பகுதியில் உள்ள கிராமவாசிகளுக்கு சமைத்த மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேவையுடைய மக்களுக்கு 50 உலர் உணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.