வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 321 பேர் சிகிச்சையின் பின் வெளியேற்றம்

மே 10, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 61 பேர் சிகிச்சையின் பின் பூரண குணமடைந்த வெளியேறியதன் மூலம் நாட்டில் குணமடைந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   

இன்றைய தினம் சிகிச்சையின் பின் குணமடைந்வர்களின் எண்ணிக்கையே நாட்டில் ஒரு நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் உயர்ந்தபட்ச எண்ணிக்கையாகும் அந்த அமைச்சு தெரிவித்தது.   

நாட்டில் இதுவரை 847 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களின் 517 பேர் தொற்று நோயியல் பிரிவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.