அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று துறைமுக படகுகள் அன்பளிப்பு

ஜனவரி 26, 2019

அவுஸ்திரேலியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று துறைமுக படகுகளை இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கையளிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் ரங்களவில் நேற்று (ஜனவரி,25) இடம்பெற்றது.

இத் துறைமுக படகுகள் 2017 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் கௌரவ. மால்கம் ட்ருன்பல் அவர்களினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, குறித்த படகுகளை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு. பிரையஸ் ஹட்ஷ்சன் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் படகுகளை பார்வையிட்டனர். இதன்போது கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்தினால் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

6.6மீற்றர் நீளமான இப்படகுகள், 34 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டதுடன் ரேடார் சமிஞ்சை உபகரணங்களையும் கொண்டுள்ளன.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் தொடர்பான ஆலோசகர் அமைச்சர் திருமதி. தாரா கொவனாக், பாதுகாப்பு படைககளின் பிரதம அதிகாரி, கடற்படை தளபதி, கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், சிரேஷ்ட கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.