புத்தளத்தில் தேவையுடைய மக்களுக்கு 100 நிவாரணப் பொதிகள் இராணுவத்தினரால் விநியோகம்

மே 10, 2020

புத்தளம் மகாகும்புகடவலை மற்றும் பள்ளம பிரதர் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய மக்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் 100 உலர் உணவுப் பொதிகள் அண்மையில் (மே, 05)வழங்கி வைக்கப்பட்டுள்ளது.   

வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரின் மனிதாபிமான செயற்பாடுளின் ஒரு பகுதியாக தேவையுடைய மக்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.    

நிவாரணப் பொதிகள் வினியோகப் பணிகளில் பள்ளமை பிரதேச செயலகம் பங்களிப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.