கின் கங்கையில் குப்பை கூளங்கள் அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படையினர்

மே 10, 2020

நாட்டில் தொடர உள்ள மழையுடன் கூடிய கால நிலையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினரால் கின் கங்கை அகலிய பாலத்தின் கீழ் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் நேற்றைய தினம் (மே, 09) அகற்றப்பட்டது.    

கங்கையில் சாதாரணமாக பாயும் நீரினால் காவிச் செல்லப்படும் குப்பை கூளங்கள் அகலியை பாலத்தின் கீழ் தேக்கம் அடைகின்றன. இதனால் கின் கங்கையின் நீரோட்டம் தடைப்பட்டு அது சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்கின்றது.    

இந்த நடவடிக்கை தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கசப்பா போலின் பணிப்புரைக்கு அமைய தெற்கு கடற்படை கட்டளையகத்தின் கடற்படை வீரர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.