கிளிநொச்சியிலுள்ள பொது இடங்கள் படையினரால் கிருமி தொற்று நீக்கம்

மே 10, 2020

இலங்கை இராணுவத்தின் 57வது பிரிவின் படைவீரர்களினால் கிளிநொச்சி நகரில் உள்ள பொது இடங்களை கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை நேற்றைய தினம் (மே , 09) முன்னெடுக்கப்பட்டது.   

கிளிநொச்சி நகரில் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள வங்கிகள் அரசு அலுவலகங்கள் தனியார்துறை கட்டிடங்கள், கடைகள் மற்றும் மத ஸ்தலங்கள் என்பன கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.